வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:46 IST)

ஹிட் லிஸ்டில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல்: திருப்பி அடிக்கும் எடப்பாடி!

ஹிட் லிஸ்டில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல்: திருப்பி அடிக்கும் எடப்பாடி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர்.


 
 
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தினகரன் தரப்பில் இருந்த எம்எல்ஏக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
 
தங்க தமிழ்ச்செல்வன், பெரும்பூர் வெற்றிவேல் ஆகியோர் தினகரன் அணியில் இருந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டனர். வழக்கு தொடுப்பது என படு தீவிரமாக இருந்தனர் இவர்கள். இவர்களது செயலுக்கு தற்போது எடப்பாடி தரப்பு பழி வாங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகளை தூசி தட்டி அவரை சிறையில் அடைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும். அதன் பின்னர் ஹிட் லிஸ்டில் தங்க தமிழ்ச்செல்வன், பெரும்பூர் வெற்றிவேல் ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.