வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:13 IST)

நிதியை காட்டி அதிகாரங்களை நசுக்கும் மத்திய அரசு: தம்பிதுரை வேதனை

மத்திய அரசு நிதியை காரணம் காட்டி மாநில அரசுகளின் அதிகாரங்களை பரிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு மாநில அரசுகளுக்கு சரியான நிதிகளை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலதரப்பினருக்கு மத்தியில் இருந்து வரும் ஒன்றுதான். 
 
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, நிதியை வைத்துக்கொண்டு மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது. மத்திய அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்று விட்டது.  
 
காங்கிரஸ், பாஜக மாநில அரசின் அதிகாரங்களை பறித்து கொண்டன. மோடி நல்லவர் ஆனால் மாநில அரசின் நிதியை கொடுப்பதுதான் இல்லை. விளம்பரத்துக்காக மட்டுமே மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கிறது. எனக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
 
அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர் மத்திய அரசை ஆதரித்து வரும் நிலையில், தம்பிதுரை மட்டும் அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.