வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 23 டிசம்பர் 2014 (13:03 IST)

திம்பம் மலைப் பகுதியில் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

திம்பம் வனப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வனப் பகுதிக்குள் இருக்கும் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளது.



 
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் இருந்து வனப் பகுதி தொடங்குகிறது. இந்த வனப் பகுதி திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி என நீண்டுகொண்டே சென்று கர்நாடகா வனப் பகுதியில் இணைகிறது.
 
இந்த வனப் பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தை, புலி, கழுதைபுலி, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறன.
 
இந்த வன விலங்குகளுக்குத் தண்ணீர் பிரச்சனைக்கு வனப் பகுதியில் ஆங்காங்கே வனத்துறையினர் தடுப்பணைகளைக் கட்டி வைத்துள்ளனர்.
 
இது தவிர பண்ணாரி அம்மன் ஃரூரல் பவுண்டேசன் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வனப் பகுதியின் ஓரத்தில் வனஓடைகளைத் தடுத்து தடுப்பணை கட்டிவைத்துள்ளனர். இதில் தேங்கும் தண்ணீர் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும்பயனாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் காய்ந்து கிடந்த தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் வன விலங்குகளின் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.