வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2016 (14:36 IST)

தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய ஆசிரியை கைது

கடந்த ஆண்டு மாயமான தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை மாணவனுடன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15), தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆண்டு எப்ரல் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற அவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் தாய் மாரியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் சிவசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணையில் சிவசுப்பிரமணியன் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச்சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி(23) என்பவருடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோதைலட்சுமியின் தந்தை செங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

விசாரணையில் கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த கோதைலட்சுமியின் பெற்றோர் அவரை சத்தம் போட்டுள்ளனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

மாயமான 2 பேரும் எங்கு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே சிவசுந்தரபாண்டின் தாயார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த கோதைலட்சுமி என்ற கடத்திச் சென்றுள்ளார். எனவே மகனை மீட்டுதரவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். கோதை லட்சுமியின் தந்தையும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி,  ஆசிரியை மற்றும் மாணவனை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களை கண்டுபிடிக்கும் பணீயை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனும் திருப்பூரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக திருப்பூருக்கு விரைந்த தனிப்படை போலீசார் இன்று அவர்களை கைது செய்தனர்