Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆபாச படம் காட்டி 5ஆம் வகுப்பு மாணவிக்கு ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்த ஆசிரியர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 4 ஜனவரி 2017 (18:03 IST)
5ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் செல்போனில் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் தங்கவேலு என்பவர், அதே பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.

இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதிக்கும் புகார் அளிக்கப்பட்டது. கல்வி அதிகாரி காந்திமதி நடத்திய விசாரணையில், ஆசிரியர் தங்கவேலு மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆசிரியர் தங்கவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :