வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (12:06 IST)

மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியை: கொடைக்கானலில் பதுங்கியுள்ளனரா?

திண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடந்து, அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


 

 
திண்டுக்கல் முத்தழகுப் பட்டியைச்  சேர்ந்த தேவராஜ் மகள் செபாஸ்டின் சாரதி. அவருக்கு வயது 21. திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுட்டோரியலில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
 
அவர் பணிபுரிந்த டுட்டோரியலில், பிளஸ்-2 தேர்வில் தமிழைத் தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த திண்டுக்கல் முள்ளிப்பாடியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்ற மாணவர் அங்கு படித்து வந்தார். அவருக்கு வயது 18.
 
இந்நிலையில், பாடம் தொடர்பாக சதீஸ்குமார் ஆசிரியை செபாஸ்டின் சாரதியிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டு வந்தார். மாலையில் வகுப்பு முடிந்த பின்னரும் சந்தித்து விளக்கம் கேட்பார். அவர்களிடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில், காதலாக மாறியது.
 
இவர்கள் மாலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் இருவரும் ஒன்றாக வெறியில் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை அறித் அவர்களது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
 
அத்துடன் ஆசிரியை செபாஸ்டின் சாரதிக்கு வேறிடத்தில் திருமணம் செய்து வைக்க வீட்டில் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், வேலைக்குச் சென்ற ஆசிரியை செபாஸ்டின் சாரதி, மாணவர் சதீஸ்குமாருடன் ஓட்டம் பிடித்தார்.
 
இதை அறிந்த செபாஸ்டின் சாரதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவரது தந்தை தேவராஜ் தனது மகளை சதீஸ்குமார் பெற்றோர், சகோதரர் உதவியுடன் கடத்தி சென்று விட்டதாக திண்டுக்கல் தெற்கு காவல்நிலையைத்தில் புகார் செய்தார். காதல் ஜோடி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி என்னும் மலைக் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் கொடைக்கானலுக்கு விரைந்துள்ளனர்.
 
சமீபத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து, அந்த காதல் ஜோடி ஓடிப்போன சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.