வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (17:36 IST)

தேயிலை செடிகளில் கொப்புள நோய்: மகசூல் பாதிப்பு

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை செடிகள் கொப்புள நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் குறைந்து வருகிறது.
 
இந்த கொப்புள நோய் தாக்கியுள்ள தேயிலை இலைகளை தொழிற்சாலைகளில் வாங்குவது இல்லை. இதனால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.
 
பச்சை தேயிலைக்கு குறைந்த விலை கிடைத்துவரும் நிலையில், தேயிலை செடிகளைக் கொப்புள நோய் தாக்கி வருவதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக் கணக்கான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
இந்த விவசாயிகள் பச்சை தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில்,  கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது.
 
இதனால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைதேடி பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
 
மேலும், மத்திய, மாநில அரசுகள் தேயிலைக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.