வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (01:35 IST)

குவாட்டர் பாட்டிலில் பல்லி - பாஸ்மார்க் வாங்காத டாஸ்மாக்

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட குவாட்டர் பாட்டிலில் பல்லி கிடந்த சம்பவம் கண்டு குடிமகன்கள் அரண்டுபோய்கிடக்கின்றனர்.
 

 
கோவை மாவட்டத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான பல நூறு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமாக ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குடிமகன் ஒருவர் ஆர்வத்துடன் குடவாட்டர் வாங்கியுள்ளார்.
 
அதை சரியாக பார்க்காமல் கிளாஸ் மற்றும் சைடிஸ் வாங்கிக் கொண்டு பாரில் அமர்ந்து மதுவிருந்துக்கு ரெடியானார். மதுபாட்டிலை அவர் திறக்க முயன்ற போது, அதில் பல்லி செத்துக் கிடந்தது தெரிய வந்தது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து டாஸ்மாக் கடை நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார்.
 
மேலும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவில் பாம்புராணி மற்றும் பல்லி போன்றவைகள் கிடக்கும் சம்பவத்தால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நமது குடிமகன்களிடம், டாஸ்மாக் கடைகள் பாஸ்மாக் வாங்குவது போல் தெரியவில்லை.