வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (08:26 IST)

பேட்ட, விஸ்வாசம் இரண்டையும் தாண்டி சாதனைப் படைத்தது டாஸ்மாக் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒருபுறம் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்க தமிழக டாஸ்மாக் மூலம் சத்தமில்லாமல் வசூல் சாதனை நிகச்த்தியுள்ளது.

ஜனவரி 10 அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய இருப் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இருப் படங்களும் விரைவில் 100 கோடி கிளப்பில் சேர இருக்கின்றன.

இந்த இருப் படங்களும் இப்படி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்க சத்தமேயில்லாமல் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வசூல் சாதனை செய்துள்ளது. பொங்கல் விடுமுறையின் போது ஜனவரி 12 முதல் ஜனவரி 15 ஆம் தேதி 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 475 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு நாளிலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வழக்கமான நாட்களி 70 கோடி ரூபாய் வரையும் வார இறுதி நாட்களில் 80 முதல் 90 கோடி ரூபாய் வரையும் வசூல் செய்வது வழக்கம் என டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

ரயில்வே மற்றும் போக்குவரத்தை அடுத்து அதிகளவில் அரசுக்கு வருமானம் தரும் துறைகளில் ஒன்றாக டாஸ்மாக் இருந்துவருகிறது.