வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (14:33 IST)

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
மறைமலைநகரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார்.
 
நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
 
இன்றைக்கு டெல்லி செங்கோட்டையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. விரைவில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் பாரதீய ஜனதா பிடிக்கும். அந்த வகையில் அ.தி.மு.க., தி.மு.க. கழகங்களுக்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டது. இந்த போர் 2016-ல் நாம் வெற்றிபெற்ற உடன் நிறைவடையும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை எதிர்த்து நிற்க தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாரதீய ஜனதா தான்.
 
நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள், விமர்சனம் செய்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத மாநிலமாகவும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் பாரதீய ஜனதாவால்தான் கொடுக்கமுடியும்.  சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் 234 இடங்களில் 122 இடங்களில் வெற்றிபெறுவோம். இதை நீங்கள் சபதமாக ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.