வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (10:38 IST)

ஜெ.வின் ஆட்சியின் போது அமைதி ; இப்போது என்ன சத்தம்? - தமிழிசை கேள்வி

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  


 
இந்நிலையில் ஜி.எஸ்.டி காட்சி உட்பட 4 காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.  4 காட்சிகளை நீக்கக் கோரி தணிக்கை வாரியத்திடம் 23 அல்லது 24 தேதி படகுழு கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில், தமிழிசை சவுந்தராஜன் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
சரியான திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை தவறாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது. விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் கூறப்படும் தவறான கருத்துகள் மக்களிடம் சுலபமாக சென்று சேரும். அதை தடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஜெயலலிதா இருந்த போது எத்தனையோ முறைகேடுகள் தமிழகத்தில் நடந்தன. அதையெல்லாம் பேசாதவர்கள் தற்போது ஏன் பேசுகிறார்கள்?. மத்திய அரசை விமசித்தால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதாலேயே இப்படி செய்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.