வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:29 IST)

கிடப்பில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

கிடப்பில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனே  நிறைவேற்ற வேண்டும். அத்துடன், இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, திட்டப்பணிகளை விரைவுப்பெறும்.
 
மேலும், கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத நிலையில், சுமார் 20 ரயில்வே திட்டங்கள் உள்ளது.
 
இவை அனைத்தும் வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த  கடிதத்தில் கூறியுள்ளார்.