வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (15:54 IST)

இலங்கை காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டதாக விடுதலையான மீனவர்கள் தகவல்

விடுதலையாகிய 5 மீனவர்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி கூறி இலங்கை காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
விடுதலையான தமிழக மீனர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் உள்ளிட்ட 5 மீனவர்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர்.
 
இதனையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர்கள் நள்ளிரவு 12.50 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். மீனவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பா.வளர்மதி, சுந்தரராஜன், ஜெயபால் ஆகியோர் வரவேற்றனர். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள், வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் தங்க வைக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணியவில் தங்கச்சி மடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி, இலங்கை காவல்துறையினர், தங்களை கை, கால்களை கட்டி அடித்து உதைத்து சித்தரவதை செய்ததாக மீனவர்கள் 5 பேரும் குற்றம்சாட்டியுள்ளனர்.