1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:36 IST)

வேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்தின் கைது ஒரு தலைகுனிவு: தமிழிசை!

வேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒரு தலைகுனிவு என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். இன்று அவர் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. 
 
மேலும், சிபிஐ ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவிந்தரராஜன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, 
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து நிதியமைச்சராக இருந்த ஒரு அரசியல்வாதி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ்நாட்டிற்கு ஒரு தலைகுனிவு.
 
வேட்டி கட்டிய தமிழர்கள் டெல்லியில் கோலோச்சிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். காமராஜர் போன்ற தூய்மையான அரசியல்வாதிகளை பார்த்த நாம், இன்று வேட்டி கட்டிய ஒரு தமிழராக சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 
மேலும், இந்த வழக்கை அவர் எதிர்கொண்ட விதம் உண்மையிலேயே மோசமான முன்னுதாரணம். காலையிலேயே சம்மன் வந்த உடனேயே விசாரணைக்கு ஆஜராகி இருக்கலாம். 27 மணி நேரம் அவர் தலைமறைவாக இருந்து இருக்கிறார். அதன் பிறகு நான் எங்கே தலைமறைவாக இருந்தேன் என்கிறார். போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். 
 
சில மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லி அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் நோட்டீஸ் கொடுத்த பின்பும் வராமல் இருந்து கொண்டு மிக சாதாரணமாக இதை கையாண்டு விட்டார். அவர் ஏதாவது அதிகாரிகளைச் சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் வீட்டை பூட்டி கொண்டிருப்பது சரியல்ல. இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை ப.சிதம்பரம் காட்டியிருக்கிறார் என பேசியுள்ளார்.