வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (15:28 IST)

ஸ்டாலின் பதவிக்காக பாஜகவுடன் பேரம்: சர்ச்சை கருத்தை அமோதித்த தமிழிசை!

திமுக பாஜகவிடம் 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டு பேரம் பேசி வருவதாக ஜெயக்குமார் தெரிவித்ததை அமோதித்துள்ளார் தமிழிசை.

 
நேற்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் விளைவாக 3வது அணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் அதற்கு வாய்ப்பில்லை என்ப போல தலைவரக்ள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த சந்திப்புக் குறித்து அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக கலைஞர் காலத்தில் இருந்தே சந்தர்ப்ப வாதக்கட்சிதான். எமர்ஜென்ஸியை எதிர்த்துக்கொண்டே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக எனக் கூறியவர்கள். 
3 ஆவது அணி அமைக்க மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள பாஜகவுக்கும் தூது விட்டு 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டுள்ளனர். அவர்கள் எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிப் பெறும் முடிவில் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக் தலைவர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. தமிழிசை இந்த தகவலை உண்மை என ஒப்புக்கொண்டார். மேலும், ராகுலை பிரதமர் வேட்பாளர் என கூறிய ஸ்டாலின் பின்னர் கேசிஆருடன் பேசினார். மற்றொரு புறம் மோடியுடனும் பேசி வருகிறார். 
 
திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறி கொண்டே இருக்கிறார்.  பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என தமிழிசை மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.