வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:48 IST)

பிறந்த நாள் வாழ்த்தையும் நாகரீகம் இல்லாமல் கூறிய தமிழிசை

நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது இன்றைய அறிவிப்புகள் அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. பெயருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் அரசியல்வாதிகள் அவரை விமர்சிக்கவும் தயங்கவில்லை



 
 
அமைச்சர் ஜெயக்குமார் கமலுக்கு பிறந்த நாளும் கூறிவிட்டு அவரது அரசியல் வருகையை விமர்சிக்கவும் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு விமர்சனமும் செய்துள்ளார்
 
தமிழிசை தனது டுவிட்டரில், இன்று மக்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுகிறவர்களின் முந்தைய பிறந்த நாட்கள் எல்லாம் மக்களை மறந்த நாட்களாகவே கொண்டாடப்பட்டன, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
 
தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு கமல் ரசிகர்கள் கமெண்டில் பதிலடி கொடுத்து வருகின்றனர். நீங்க எந்த பிறந்தநாளும் மக்களுக்காக கொண்டாடவில்லை, நீங்கள் அவரை பற்றி விமர்சிக்க தகுதியில்லை மேடம். ஆட்சிவந்த பின்னும் நீங்க நினைக்கல' என்று ஒரு ரசிகரும், பிறந்தநாள் அன்று கூட அரசியல் தாக்கி பேசும் நாகரீகமற்றவர்களா நாம் வெட்கம்..' என்று ரசிகரும், இதுக்கு பேர் தான் வயித்தெரிச்சல்.. இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தி கமல் சார அரசியலுக்கு வர வச்சுட்டீங்க. எல்லா பெருமையும் BJPக்கே' என்று ஒரு ரசிகரும் பதிலடி கொடுத்துள்ளனர்.