வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (16:50 IST)

போட்டுக் கொடுத்த தமிழிசை : ஹெச். ராஜாவை வச்சு செய்த டெல்லி

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்டதன் பின்னனியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியாரின்  சிலை அகற்றப்படும் என்கிற ரீதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த கருத்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
 
மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், வீரமணி, சீமான் உள்ளிட்ட பலரும் ஹெச்.ராஜாவின் கருத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேநேரம், அவரின் கருத்துக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துவிட்டார். 
 
அந்நிலையில், இதுபற்றி டெல்லியிலிருந்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா "நான் விமானத்தில் வந்து கொண்டிருந்த போது எனது பேஸ்புக் அட்மின் இந்த பதிவை இட்டு விட்டார். நான் டெல்லி வந்து இறங்கியதும் அதைக் கண்டு நீக்கி விட்டேன். அட்மினையும் நீக்கி விட்டேன்” என விளக்கம் அளித்தார். ஆனாலும், அவரின் விளக்கத்தை தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் ஏற்கவில்லை.
 
இந்நிலையில், ஹெச்.ராஜாவிற்கு டெல்லி மேலிடம் கொடுத்த டோஸ் காரணமாகவே அவர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.  அதாவது, இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக மாறியதும் உஷாரான தமிழிசை, இதுபற்றி பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார். 
 
அப்போது, ஹெச்.ராஜா தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை கூறி வருவது நல்லது அல்ல. 50 வருடங்களுக்கும் மேல் தமிழகத்தில் கழக ஆட்சி நடந்து வருகிறது. எனவே, இப்படி கருத்து தெரிவித்தால் ஓட்டுக் கேட்டு நாம் மக்களை சந்திக்கவே முடியாது என்கிற ரீதியில் எடுத்துக் கூற, டெல்லி சென்ற ராஜாவுக்கு அமித்ஷா செம டோஸ் விட்டாராம். அதனாலேயே, அட்மின் தவறாக பதிவு செய்து விட்டார் என பழியை அவர் மீது போட்டு விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார் ஹெச்.ராஜா என செய்திகள் வெளிவந்துள்ளது.