செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (07:18 IST)

டுவிட்டரில் டிரெண்ட் ஆன '#பாசிசபாஜக_ஆட்சிஒழிக

நேற்று விமானத்தில் பாஜகவை எதிர்த்து தமிழிசை முன் கோஷமிட்ட இளம்பெண் சோபியா கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் ஏராளமான டுவீட்டுக்கள் பதிவு செய்யபப்ட்டு வருகிறது.

சோபியா மீது அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்த போலீசார், பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகரை நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்யாதது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சோபியா கைதுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக, #சோபியா, #பாசிசபாஜகஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றது. இந்த ஹேஷ்டேக்குகளில் பாஜகவுக்கு எதிராக ஏராளமான டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல், வாக்காளர்களை கவர அவர்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்ப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கு அழகு என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.