Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடியாருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்: தமிழருவி மணியன்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (15:33 IST)

Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.முன்னதாக முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்த அவர் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.


 

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்கு பின்னால் மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதால் வேறு வழியின்றி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்படி தனக்குரிய கடமையை ஆளுநர் சரிவர செய்து விட்டார்.

இந்த பினாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக.,  காங்கிரஸ், பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் தேவையா? நமக்கு தேவை மறு தேர்தல்தான்: பார்த்திபன் ஆவேசம்!

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க ...

news

ஒரு போட்டியில் வென்றால் போதும்; 1 மில்லியன் டாலர் பரிசு: ஜசிசி அறிவிப்பு

இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் ...

news

அபராத தொகை ரூ.10 கோடி கட்டவில்லையெனில் சசிகலாவின் சொத்துக்கள் ஜப்தியா?

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தலா ரூ. 10 கோடி ...

news

சமாதிக்கே இந்த அடின்னா..உயிரோடு இருக்கும் போது? - இளங்கோவன் அதிரடி

ஜெ.வின் சமாதியை சசிகலா இந்த அடி அடிக்கிறார். அவர் உயிரோடு இருக்கும் போது என்ன அடி ...

Widgets Magazine Widgets Magazine