Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபல தமிழ் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (09:06 IST)
பிரபல தமிழ் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி நேற்றிரவு காலமானார். அவருக்கு தமிழ் அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாக்கியம் ராமசாமி சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானார். மறைந்த பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்

ஜ.ரா.சுந்தரேசன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் பாக்கியம் ராமசாமி என்ற புனைப்பெயரில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். பாக்கியம், ராமசாமி என்பது அவரது பெற்றோர்கள் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்கள்தான் அப்புசாமி, சீதாப்பாட்டி என்பது அனைவரும் அறிந்ததே
அப்புசாமியும் அற்புத விளக்கும்’, ’அப்புசாமியும் 1001 இரவுகளும்’, ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’ ஆகிய நாவல்கள் இவர் எழுதிய பிரபலமான நாவல்கள் ஆகும். இவர் பல ஆண்டுகளாக குமுதம் வார இதழில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :