வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (16:41 IST)

இதுக்கே இப்படினா எப்படி...? இனிமேதான் ஜில்ஜில் ஜிகாஜிகா

கடந்த சில தினகங்களாக தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர் காரணமால்க சென்னையே ஊட்டி போல் உள்ளதாம், அப்போ ஊட்டி நிலைமைலாம் எப்படி இருக்கும் பாத்துக்கோங்க...
 
இப்படியிருக்கையில் மழை குறித்த அப்டேட்டுகளை வழங்கி வந்த தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் இப்போது குளிர் எந்த அளவுக்கும் இருக்கும் என்பதை பற்றி செய்தியை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது, வரும் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதுமே குளிர் பயங்கரமாக இருக்குமாம். இது குறித்து அவர் விரிவாக தெரிவித்ததாவது, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அருகே காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. 
இது வரும் 12 ஆம் தேதி இலங்கைக்கு தெற்கே நகர்ந்து வர போகிறது. இதனால் தமிழகத்துக்கு மழை வராது. ஆனால் மேகக்கூட்டங்கள் அதிகரித்து தமிழகம் முழுவதும் குளிர்ந்த காற்று நிறையவே வீசும். 
 
அதுவும் குறிப்பாக வரும் 12 மற்றும் 13 தேதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவு நேரத்தில் கூடுதலாகவே குளிர் இருக்கும் என தெரிவித்துள்ளார்.