வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2016 (08:48 IST)

தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்த முடியும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.



 


 
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா வேண்டுகோளுக்கிணங்க, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பயன்தரும் அளவுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விவசாய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
விவசாய மக்களுக்கு பயன் தரும் இந்த காப்பீட்டு திட்டம் மூலம் கடன் பெறலாம், விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தலாம். 
 
மேலும், குறைந்த வட்டி காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை தமிழக பாஜக தலைவராகிய நான் சோகமுடன் சொல்கிறேன்.
 
ஏனென்றால், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து தமிழக மக்கள் மட்டுமல்லாது, தமிழக தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசால் அவசர சட்டம் இயற்ற முடியாது.
 
ஆனால் அதே சமயத்தில், தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியும்.
 
மத்திய அரசு இதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்க முடியும் என்ற செய்தியை மின்னஞ்சல் மூலம் மத்திய தலைமை எங்களுக்கு அனுப்பி இருக்கிறது.
 
எனவே, அவசர சட்டம் இயற்றி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.