வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (15:00 IST)

பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

பிப்ரவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.


 

 
இம்மாதம் 16 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். 
 
சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் 16 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டிற்கான தமிழக அரசின் இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை துறை செயலாளர் ஜமாலுதீன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.