செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2015 (03:41 IST)

டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கு: தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை - தலித் பாண்டியன்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கில் தமிழக அரசு விசாரணை மீது நம்பிக்கை இல்லை என தலித் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, தூத்துக்குடியில், தேசிய தலித் விடுதலை இயக்க தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் பாடுபட்ட விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக் கொள்ளும் அளவு அவர் கோலை அல்ல. மிகவும் துடிப்பான அதிகாரி. நேர்மையான அதிகாரி. அவருக்கு உயர் போலீஸ் அதிகாரிகளின் நெருக்கடியினால் தான் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் மீது மிகப்பெரிய அளவில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதைதுடைக்க அவர்கள் முன்வரவேண்டும்.
 
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. மாறாக சிபிசிஐடி விசாரணையே போதுமென கூறியுள்ளது. இதனால், தமிழக அரசு விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
 
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது முதல் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. எனவே, தமிழக அரசு செயல்பாடுகள் மீது மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு மீது தேசிய தலித் விசாரணை கமிஷன் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தலித் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கோரி, இந்தியாவில் உள்ள தலித் எம்பிகளுக்கு மனு அனுப்பியும், நேரிலும் சென்றும் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் நடாளுமன்றத்தில் தமிழக அரசு செயல்பாடாட்டை பற்றி பேசுவதாக உறுதி மொழி அளித்துள்ளனர்.
 
மேலும், திமுகவும் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர் என்றார்.