செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (18:22 IST)

மே 14ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் ?

தமிழக சட்டமன்றத் தேர்தலை மே மாதம் 14ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 18ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தவும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

 
 
தமிழ்நாடு சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 22ஆம் தேதி முடிவடைகிறது, இந்நிலையில், விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,
 
தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
 
ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறார், இதையடுத்து, அவருடன் ஆணையர்கள் ஜோதி மற்றும் ராவத் ஆகியோருடன் 8 பேர் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் இன்று இரவு புதுச்சேரி செல்கின்றனர்.
 
சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவடையாத காரணத்தினால் தேர்தல் விதிமுறை அமலில் விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் விதிமுறை அமலில் 4 மாவட்டங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது வெள்ள நிவாரணப் பணிகளுக்காக விதி விலக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது