வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2014 (18:25 IST)

மீனவர்கள் பிரச்சனையில் பா.ஜ.க. இரட்டை நிலை: ஜெயலலிதா சாடல்

மீனவர்கள் பிரச்சனையில் தமிழகத்தி்ல் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை என பாரதீய ஜனதா இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
 
தூத்துக்குடியில் உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பேசியபோது இவ்வாறு கூறிய அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், விலைவாசி உயர்ந்தாலும் தமிழக அரசு குறைந்த விலையில் பொருட்கள் வழங்குகிறது என்றும் தெரிவித்தார்.
 
முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஜெயலலிதா கூறினார்.
 
தமிழகத்தில் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மக்களுக்காக, மக்களின் நலனுக்காக போராடுகின்றன ஒரே இயக்கம் அ.தி.மு.க. என்றும், உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழர்களின் நலன் காக்கும் இயக்கமும் அ.தி.மு.க. தான் என்றும் அவர் கூறினார்.