1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2015 (01:14 IST)

தமிழக ஆளுநர் ரோசய்யா பிறந்த நாள்: ஜெயலலிதா வாழ்த்து

தமிழக ஆளுநர் ரோசய்யா, பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மலர் கொத்து கொடுத்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
 

 
தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு இன்று 82வது பிறந்த நாள். இதனையடுத்து, , ஆளுநர் ரோசய்யாவுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
இன்று காலை தொலைபேசி வாயிலாக ஆளுநரை ரோசய்யாவை தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், வாழ்த்துச் செய்தியும், அழகிய மலர் கொத்தும் கொடுத்து அனுப்பினார்.
 
இதனையடுத்து, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரித்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.