1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (16:37 IST)

தமிழக பட்ஜெட் புதிய மொந்தையில் பழைய கள்: மு.க.ஸ்டாலின் தாக்கு!

2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யபட்டது. இதனை அதிமுக நிதியமைச்சர்  ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரை வாசிக்கும் முன்னர் அவர் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் பெயர்களை குறிப்பிட்டார். இதற்கு எதிர்கட்சியான திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனை அடுத்து அவையில் கூச்சல் குழப்பம்  ஏற்பட்டது.

 
பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றதும் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றத்தால் தண்டனை பெற்று வரும் ஒருவரின் பெயரை சட்டசபையில் புகழ்வது அவை மரபுக்கு  எதிரானது. சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயர்களை அமைச்சர் கூறியது தவறான செயல். எனவே, அதை அவைக்குறிப்பில்  இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை சபாநாயகர் மறுத்து விட்டார்.
 
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ’புதிய மொந்தையில் பழைய கள்’ என்பது போல ஏற்கனவே பல பட்ஜெட்டுகளில் கூறிய திட்டங்களை மீண்டும் கூறியுள்ளனர். மாநிலத்தின் மொத்த வருவாயை விட  கடனுக்கான வட்டி அதிகமாகி மிகப் பெரிய கடனாளி என்ற சாதனையை தமிழகம் படைத்துள்ளது. மேலும் பட்ஜெட் தாக்கலின் போது அனைத்து அமைச்சர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு ஆனால் 4 அமைச்சர்கள் இன்று அவைக்கு  வரவில்லை என கூறியுள்ளார்.