வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி/சுரேஷ்/தமிழரசு
Last Updated : புதன், 25 மார்ச் 2015 (12:58 IST)

தமிழக பட்ஜெட் 2015-2016 முழுவிவரம்

2015-2016 ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முழுவிவரத்தை இந்த செய்திச்சரத்தில் அறியலாம்.

=============================================================================

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சரும், முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். இத்துடன் நிகழ்நேரப் பதிவு நிறைவடைந்தது.

=============================================================================

அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2,090 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏலக்காய் மீதான வரி 2 சதவீதமாக குறைப்பு.

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

மேலும் 6.62 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.


=============================================================================

கொசுவலைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத மதிப்புக்கூட்டுவரி முற்றிலும் நீக்கப்படுகிறது.

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.

பாதுகாப்பான குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,803.30 கோடி நிதி ஒதுக்கீடு.

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு.

ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி சுமார் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

தமிழகத்திற்கு கிடைக்கும் மத்திய அரசின் நிதி ரூ.1,500 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

உயிரி எரிபொருள் மூலம் மின் உற்பத்திக்கு முழு வரிவிலக்கு.

மதிப்புக்கூட்டு வரியிலுள்ள 3 சதவீத உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படுகிறது.

=============================================================================

ஆதிதிராவிடர் உயர்கல்வி உதவித் திட்டதிற்கு ரூ.697 கோடி நிதி ஒதுக்கீடு.

இலவச மடிகணினி திட்டத்திற்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் நலனுக்கு ரூ.115.80 கோடி ஒதுக்கீடு.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.101.59 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான திட்டங்களைத் தொடர ரூ.364.24 கோடி ஒதுக்கீடு.

நேரு உள்விளையாட்டு அரங்கில் ரூ.12 கோடி செலவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

அரசு மற்றும் தனியார் முதலீட்டுடன் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,262 கோடி ஒதுக்கீடு.

தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.139.26 கோடி நிதி ஒதுக்கீடு.

இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108.64 கோடி ஒதுக்கீடு.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கு ரூ.18,668 கோடி ஒதுக்கீடு.

இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கு ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,442 கோடி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பவிலுக்கு ரூ.82.9 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி ஒதுக்கீடு.

பிற பல்கலைக்கழகங்களுக்கு ரூ.886.46 கோடி ஒதுக்கீடு.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்திட்டத்திற்கு ரூ.149.70 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி நிதி ஒதுக்கீடு.

250 பழம்பெரும் கோவில்களைப் புணரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.

அண்ணதானத் திட்டம் மேலும் 206 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

பெண் குழந்தை பாதுகாப்புக்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.

விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி ஒதுக்கீடு.

12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படும்.

=============================================================================

தேசிய கிராமக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.133.33 கோடி நிதி ஒதுக்கீடு.

60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.

கடல் நீரைக் குடிநீராக்கும் 2 புதிய திட்டங்கள் தொடங்கப்படும்.

ஏழை கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி திட்டத்திற்கு ரூ.668.32 கோடி நிதி ஒதுக்கீடு.

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

182 புதிய தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளது.

110 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 100 சதவீத கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டணத்துக்கான ரூ.450.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி துறைக்கு ரூ.3,696 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================
மேலும் அடுத்த பக்கம்..


கிராம தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

10 HP மோட்டார் பம்புகளுக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ஏலக்காய் மீதான மதிப்புக்கூட்டு வரி 5 லிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

LED விளக்குகளுக்கு மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

கைப்பேசிக்கும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர்க்கல்வித் துறைக்கு ரூ.3,696 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சிக்கு ரூ.3,926 கோடி ஒதுக்கீடு.

குக்கிராம மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

6 ஆயிரம் கி.மீட்டர் தூர நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,260 கோடி நிதி ஒதுக்கீடு.

தூய்மை கிராமம் இயக்கத்தின் கீழ் திட்டக்குழு மேலாண்மைக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.

15 லட்சம் வீட்டுக் கழிப்பறைகள் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சிக்கு ரூ.750 கோடி.

=============================================================================

மீனவர்கள் நலன் மற்றும் நிவாரணம் வழங்க ரூ.183 கோடி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ.278 கோடி ஒதுக்கீடு.

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு ரூ.365 கோடி ஒதுக்கீடு.

வேளாண் துறைக்கு அடுத்த படியாக நெசவுத்துறை வேலை வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது.

கைத்தறி மற்றும் நெசவுக்கு ரூ.449 கோடி ஒதுக்கீடு.

பரமக்குடி மற்றும் அச்சன்குளம் ஆகிய பகுதிகளில் நெசவுத்துறையின் வளர்ச்சிக்காக ரூ.28.02 கோடி.

சென்னை மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் SMART CITY திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

தொழிற்துறைக்கு ரூ.17,134 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் தொடங்கப்படும்.

தென் மாவட்டங்களின் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொழிற்துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்.

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

சொட்டுநீர் பாசன முறையில் சென்னையில் 3.06 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்ய வழிவகை செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தொடங்கப்படும்.

=============================================================================

பாலங்கள், ஏரிகள் பராமரிப்பு மற்றும் புதிய ஏரிகள் உருவாக்க ரூ.334.57 கோடி நிதி ஒதுக்கீடு.

மின்சாரத்துறைக்கு ரூ.13,586 கோடி ஒதுக்கீடு.

மின்சாரத்தை வாங்க 13 நிறுவனங்களுடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மாற்று மின்சார உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,828 கோடி நிதி ஒதுக்கீடு.

வரும் நிதியாண்டில் மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.615 கோடி நிதி ஒதுக்கீடு.

பால்வளத்துறைக்கு ரூ.100.68 கோடி நிதி ஒதுக்கீடு.

டீசலுக்கான மானியம் ரூ.500 கோடியாக போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயணத்திற்காக ரூ.480 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளை மேம்படுத்த ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

நதிநீர் இணைப்பு பணிகளைத் தொடர ரூ.253 கோடி.

ரூ.53.72 கோடி செலவில் 67 லட்சம் மரக்கன்றுகள் நட ஒப்புதல்.

விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு கவனம் செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்வேலி அமைக்க ரூ.51.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி கணிக்கப்பட்டுள்ளது.

13,775 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்று தமிழகம் நிறைவடைந்துள்ளது.

மின் கட்டணத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 115 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகப் பெற்றுள்ளது.

அணைகளைப் புணரமைக்க ரூ.450.13 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

2014-15 ஆம் ஆண்டுகளில் ரூ.4,955 கோடி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

உணவு தானிய சந்தை கட்டுப்பாட்டுக்கு ரூ.100 ஒதுக்கீடு.

மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

மீன்வளத்துறைக்கு ரூ.228.68 கோடி ஒதுக்கீடு.

113 அணைகளை புனரமைப்பதற்கு ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.

கால்நடை பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பாசன வசதிகளை மேம்படுத்த உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ரூ.2950 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

=============================================================================

மேலும் அடுத்த பக்கம்...


சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.50-ம், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70-ம் மானியம் வழங்கப்படும்.

25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.

தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.

12,000 பசு மாடுகள், 6 லட்சம் செமமறி ஆடுகள் வழங்கப்படும்.

நதிநீர் இணைப்பதற்காக ரூ.253 கோடி ஒதுக்கீடு.

சிறப்பு பொது வினியோகத் திட்டத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு.

=============================================================================

குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

மின்சாரத்துறைக்கு வரும் நிதியாண்டில் 13,586 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.

தட்டப்பாடின்றி உரம் கிடைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

பயிர் கடன்களுக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திர பயன்பாட்டை அதிகரிக்க ரூ.100 கோடி.

தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கப்படும்.

முறையாக செலுத்துபவர்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

=============================================================================

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.46.77 கோடி ஒதுக்கீடு.

சாலைப்பாதுகாப்புக்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு.

சாலை விபத்துகளைத் தவிர்க்க ரூ.165 கோடி கூடுதலாக ஒதுக்கீடு.

3.2 லட்சம் பேருக்கு அடுத்த நிதியாண்டில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

வருவாய் துறைக்கு மொத்தம் ரூ.6,123 கோடி ஒதுக்கீடு.

ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.

வேளாண் துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.6,613.68 கோடி ஒதுக்கீடு.

ரூ.200 கோடி ரூபாய் செலவில் 1.2 லட்சம் ஏக்கர் பரப்பில் முன் பாசனம் செய்துதரப்படும்.

=============================================================================

169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.

சிறைக் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ.10.78 கோடி ஒதுக்கீடு.

தேசிய வாழ்வாதாரத் திட்டதின் கீழ் ரூ.250 கோடியும், நகர வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.107 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

34 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

40.3 லட்சம் மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

காவல்துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 5568.81 கோடி ஒதுக்கீடு.

காவல்துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை.

தீயணைப்பு மற்றும் மீட்பு திட்டப்பணிகளுக்கு 4 ஆண்டுகளில் 73.29 கோடியில் திட்டம்.

சிறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.227.03 கோடி ஒதுக்கீடு.

=============================================================================

மறைமுக வரி வருவாயை மாநிலங்களுக்கு அளிக்கும் காலம் கனிந்துவிட்டது.

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 181 கோடி ரூபாய் 24 மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் இடதுசாரி தீவிரவாதம் பரவாமல் தடுக்க சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் தொடங்கப்படும்.

ஊராட்சிக் கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி நிதி ஒதுக்கீடு.

=============================================================================

பொருளாதார வீழ்ச்சியால் கடந்த 2 ஆண்டுகளில் வரி வருவாய் உயரவில்லை.

சமூக நலத்திட்டங்களால் வரிச்சுமை கூடியுள்ளது.

1137 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை.

மத்திய அரசின் 8 திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு செயல்படுத்திய 24 திட்டங்களுக்கு நிதியைக் குறைத்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையால் வரி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

=============================================================================

நிதித்துறை பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

ஓ.பி.எஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப்பா வாசித்துக் கொண்டிருக்கிறார்.

=============================================================================

தமிழக பட்ஜெட்டைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு.

பட்ஜெட் தாக்கலை நிறுத்திவிட்டு பிற பிரச்சனைகளை விவாதிக்க கோரிக்கை.

சட்டப்பேரவையில் அனுமதிக்கக் கோரி தேமுதிகவினர் தர்ணா போராட்டம்.


=============================================================================