வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (00:09 IST)

தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை

தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


 

சென்னை உயர் நீதிமன்றத்தில், விருநகரைச் சேர்ந்த ஆனந்த முருகன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதில், வழக்கறிஞர் சட்டம் 24 ஏ பிரிவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும், அப்போது தான் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக வருவதை தடுக்க முடியும்.
 
எனவே, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்பு வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
 
மேலும், உச்ச நீதி மன்ற உத்தரவிப்படி, சட்டத்தில் திருத்தம் செய்யவும், பார் கவுன்சில் நடவடிக்கையை கண்காணிக்கவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், வழக்கறிஞராகப் பதிவு செய்யும் போது, அவர்கள் பிறந்த இடம், படித்த இடம் குறித்தும், குற்றப் பின்னணி உள்ளதா  என்றும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்றும், குற்றப் பின்னணி இல்லாத வழக்கறிஞரும், 20 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.