சுட்டெறிக்கும் வெயிலில் இதமா மழை!! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (20:37 IST)
மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இன்னும் ஏப்ரல், மே எல்லாம் வந்தா வெயில் என்ன காட்டு காட்டுமோ? என்பது அனைவரின் வேதனையாக உள்ளது. 
ஆனால், இண்டஹ் கவலையில் இருந்து விடுபட வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளது. ஆம், நாளை முதல் அனல் காற்று வீசுவது குறைய துவங்கும் என்பதுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி. 
 
குமரி கடல், அதனை ஒட்டியுள்ள பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். 


இதில் மேலும் படிக்கவும் :