வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (09:07 IST)

ராம்குமார் கழுத்தை அறுத்து கொண்டது தற்கொலை அல்ல நாடகம்: மருத்துவர் தகவல்

விசாரணையில் இருந்து தப்பிக்கவே ராம்குமார் கழுத்தை அறுத்து கொண்டார், தற்கொலைக்கு செய்ய முயற்சிக்கவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் காவல் துறையினரிடம் பிடிப்படக் கூடாது என்பதற்காக கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல் துறையினர் மீட்டு  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:–
 
உண்மையிலேயே கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கழுத்தின் நடுப்பகுதியில் நாடிக்கு கீழ் அறுப்பார்கள். ஆனால் ராம்குமார் கழுத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் மட்டும் அறுத்துள்ளார். இதனால் அவர் இறக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வெட்டியதாக தெரிகிறது.
 
மேலும் வெட்டுக்காயத்தின் ஆழம் அதிகமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் ஆழம் அதிகம் இல்லாமல் ஏதோ கழுத்தை வெட்டி நாடகம் ஆட வேண்டும் என்றும், விசாரணையில் இருந்து பேசாமல் சில காலம் தப்பிக்கலாம் என்பதும் போலும் செயல்பட்டுள்ளார்.
 
மருத்துவர்கள் குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீவிர சிகிச்சை அளித்ததால் விரைவில் பேசக்கூடிய நிலைக்கு வந்துவிட்டார். 6 நாட்களில் கட்டு அவிழ்க்கப்பட்டு இயல்பான நிலைக்கு ராம்குமார் வந்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.