செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (11:07 IST)

சென்னை ரயில் நிலையங்களில் 122 சிசிடிவி கேமராக்கள்

சென்னையில் உள்ள 4 முக்கியமான ரயில் நிலையங்களில் 122 சிசிடிவி கேமிரா பொருத்த ரூ:2 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 

 
நுங்கம்பாக்கத்தில் நடைப்பெற்ற சுவாதியின் கொலை தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேலை அந்த இடத்தில் சிசிடிவி கேமிரா இருந்திருந்தால் எளிமையான குற்றவாளியை அடையாளம் கண்டு இருந்திருக்கலாம். ஆனால் அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிரா இல்லாததால் குற்றவாளியை இன்னும் கைது செய்ய முடியவில்லை. 
 
அதன் எதிரொலியாக தற்போது சென்னையில் உள்ள முக்கியமான 4 ரயில் நிலையங்களில் ரூ:2 கோடி செலவில் சிசிடிவு கேமிரா பொருத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தரம் குறைவான சிசிடிவி கேமிராக்களால் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தரம் உயர்வான சிசிடிவி கேமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் ரயில் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை துல்லியமான கண்டறிய உதவும். தற்போது முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக 48 கேமிராக்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் 28 கேமிராக்கள் மற்றும் தம்பரம் ரயில் நிலையத்தில் 22 கேமிராக்கள் ஆகியவை பொருத்தப்பட உள்ளன.