’ஜீவ சமாதி ’ அடைந்த பெண்ணைப் பற்றிய ஆச்சர்யம் : வைரலாகும் வீடியோ

jeea samathi
Last Modified புதன், 15 மே 2019 (13:29 IST)
ஜீவ சமாதி இது நம் இந்தியாவில் மிகவும் பரீட்சயமான ஒன்றுதான். நம் நாட்டில் பல காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு ஆன்மீக சடங்காகக் கருதப்படுவது ஜீவ சமாதி ஆகும்.
இந்த ஜீவ சமாதி எனௌம் சடங்கை  நிறைய சித்தர்களும், யோகிகளும் ஆன்மீகவாதிகளும் கடைப்பிடித்ததாக  வரலாறுகள். புராணங்கள் ஆன்மீக புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளன.
 
சமீபத்தில் கூட ஒரு சிறுவன் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகத்தில் ஒரு செய்தி பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு முன்னால் ஜீவ சமாதி அடைந்த பெண்ணைப் பற்றிய ஒரு ஆச்சர்யமான விசயம் பரவிவருகிறது.
 
இப்பெண் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னர் அவரது தலைமுடி வெள்ளையாக இருந்தது : ஆனால் இவர் ஜீவ சமாதி அடைந்த பின்னர் தற்போது அவரது தலைமுடி கருப்பாக மாறியுள்ளது.
jeea samathi
மேலும் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அப்பெண் ஜீவ சமாதி அடைந்த பின்னர் இப்போது வரைக்கும் அந்த சமாதியில் எந்தவொரு துர்நாற்றமும் ஏற்படவில்லை என்று அந்த கிராமத்து மக்கள் கூறுகிறார்கள்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :