1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (16:14 IST)

தமிழக அரசுக்கு அடுத்த குட்டு! - அரசை விமர்சிக்க கூடாதா என நீதிமன்றம் கேள்வி?

அவதூறு சட்டப் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
தம் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
 
எனினும், இத்தடையை மீறி மற்றொரு அவதூறு வழக்கில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதுதொடர்பாக விஜயகாந்த், பிரேமலதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டது.
 
இந்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வியாழனன்று விசாரித்தது. அப்போது, விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ஆகியோருக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அத்துடன் அவதூறு வழக்குகள் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக சாடினர்.
 
மேலும், ஒரு அரசை விமர்சிப்பதே என்பது அவதூறாகி விடாது என்று கூறியுள்ள நீதிமன்றம், தமிழக அரசு இதுவரை தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகள் பற்றிய விவரத்தை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு உள்ளது.