Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வர் காட்டில் மழை: ஒரே நாளில் அமைச்சர், மூத்த தலைவர், 4 எம்.பி-க்கள் ஆதரவு!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (09:44 IST)
ஒரே நாளில் ஒரு அமைச்சர், ஒரு மூத்த தலைவர், 4 எம்.பிக்களின் ஆதரவை பெற்றுள்ளார் ஓ.பி.எஸ். இதனால் சசிகலா தரப்பு சங்கடங்களை சந்தித்து வருகிறது. 

 
 
நாமக்கல் பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக் குமார் ஆகிய இரு எம்.பிக்கள் இன்று காலை ஓபிஎஸ் பக்கம் வந்து சேர்ந்தனர். அடுத்து முக்கிய நிகழ்வாக மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த முதல் அமைச்சர் ஆவார். 
 
இதை அடுத்து மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். காலத்தைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
மேலும், திருப்பூர் எம்.பி. சத்யபாமா, திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :