வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (15:35 IST)

கொளுத்தும் கோடை வெயில்: 55 அடியாகக் குறைந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

கோடை வெயில் அதிரித்து வருவதாலும், அணையிலிந்து அதிகப்படியின நீர் வெளியேற்றப்படுவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.40 அடியாக குறைந்துள்ளது.


 

 
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 74 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 
விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுகின்றது. அணைக்கு வரும் நீரை விட நீரின் அளவு அதிகமாக உள்ளது.
 
இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக அதிகப்படியான நீர் தேவைப்படுகின்றது.
 
மேட்டூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு அங்கிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.