Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை: சென்னையில் இன்று முதல்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (08:30 IST)
சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் (மே 14) துவங்கியுள்ளது.

 
 
நேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 8 கி.மீ. தொலைவுக்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பாதையில் ஏழு ரயில் நிலையங்களை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் சேவை இயக்கப்படும்.
 
கீழ்பாக்கம், ஆவடி சாலை, ஷெனாய் நகர், அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த சுரங்க ரயில் பாதை சேவையால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண கட்டணம் ரூ.40 வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :