முதலமைச்சர் பதவிக்கு ஓ.பி.எஸ். அருகதையற்றவர்; சசிகலாதான் சரி: நவநீத கிருஷ்ணன்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 11 பிப்ரவரி 2017 (00:45 IST)
மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். எனவே சசிகலாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நவநீத கிருஷ்ணன், ”சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி செய்கிறார். தான் மிரட்டப்பட்டதாக தவறான தகவலை பன்னீர் செல்வம் பரப்புகிறார்.

தான் மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்பிரமணியன் சாமி கூறியிருக்கிறார். எனவே, காலங்கடத்தாமல் சசிகலாவை முதலமைச்சர் பதவியேற்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சசிகலாவிற்கு உரிமை உண்டு. மீண்டும் பொதுக்குழு, தேர்தல் என கூறுவது தவறு” என்று தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :