முதல்வரானதும் சசிகலாவின் நடவடிக்கை இவர்கள் மீது தான்: சுப்பிரமணியன் சுவாமியின் ‘பொறுக்கி’ டுவீட்!

முதல்வரானதும் சசிகலாவின் நடவடிக்கை இவர்கள் மீது தான்: சுப்பிரமணியன் சுவாமியின் ‘பொறுக்கி’ டுவீட்!


Caston| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (15:05 IST)
தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நாளை மறுநாள் திங்கள் கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வந்தவாறு உள்ளன. இந்நிலையில் அவர் திங்கள் கிழமை முதல்வரானதும் செய்ய வேண்டியது குறித்து சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.

 
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பொறுக்கிகள் என்ற வார்த்தையை உபயோகித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என கூறிய சுப்பிரமணியன் சுவாமி பின்னர் ஒட்டுமொத்தமாக தமிழ் பொறுக்கிகள் என கூறி வந்தார்.
 
பலரும் அவரது கருத்துக்கு அவரது டுவிட்டரிலேயே பதிலடி கொடுத்தும் அவர் திருந்தியபாடில்லை. தொடர்ந்து பொறுக்கி என்றே பேசி வருகிறார். இந்நிலை சசிகலா திங்கள் கிழமை முதல்வராக இருப்பதையடுத்து அவருக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஒரு டுவீட் செய்துள்ளார்.

 
அதில், திங்கள் கிழமை சசிகலா முதல்வரானால் அவர் கண்டிப்பாக பொறுக்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் அந்த டுவிட்டில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :