Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘பொறுக்கி’ புகழ் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சென்னையில்: ஆளுநரை சந்திக்க தீவிரம்!

‘பொறுக்கி’ புகழ் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சென்னையில்: ஆளுநரை சந்திக்க தீவிரம்!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (16:49 IST)
தமிழக அரசியலிலும், தமிழக பிரச்சனைகளிலும் சர்ச்சைக்குறிய வகையில் கருத்துக்களை கூறி தமிழர்களின் கண்டனங்களை அடிக்கடி பெறும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க சென்னை வந்துள்ளார்.

 
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என கூறி உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பெற்றார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனாலும் தொடர்ந்து தனது டுவிட்டரில் தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்து வந்தார். இதனால் பலரும் அவரது டுவிட்டரில் அவரை திட்டி தீர்த்தனர்.
 
இந்நிலையில் தமிழக முதல்வராக சசிகலா வரக்கூடாது என பெரும்பாலான மக்கள் கருத்து கூறி வரும் வேளையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார். சசிகலாவை முதல்வராக பதவியேற்க வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை விமர்சித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
 
இந்நிலையில் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்திக்க சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளதாகவும், சந்திக்க நேரம் கேட்டு காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :