வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2017 (14:39 IST)

ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள்

நீர் தேர்வுக்கு எதிராக திருச்சியில் மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் முடித்து வைத்தனர்.


 

 
நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று திருச்சியில் திமுக தலைமையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவை சேர்ந்த 5 பேர் மற்றும் அனைத்திந்திய மாணவர் மன்றம் ஆகியோர் இணைந்து காலவரையற்ற உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களது போராட்டம் இன்று 5ஆம் நாளை எட்டியது. இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்துக்கு ஸ்டாலின் மற்றும் நல்லகண்ணு ஆகியோர் சென்றனர்.
 
போராடும் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற  வேண்டுகோள் விடுத்தனர். பின் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். மேலும் வரும் 13ஆம் தேதி போராட்டம் நடக்க உள்ளதாக நல்லகண்ணு தெரிவித்தார்.