1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:13 IST)

இரவு நேரத்தில் மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்த அதிமுக அமைச்சரால் சலசலப்பு!

இரவு 11 மணியளவில் மாணவிகள் விடுதியில் அதிமுக அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 

நேற்று வியாழக்கிழமை அன்று நாடு முழுவதும் நாட்டின் 68வது ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதிலும் உள்ள அரசு அலவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியகொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

முன்னதாக விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஈரோடு வ.உ.சி. விளையாடு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகள் விளையாட்டு விடுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன், திடீரென மாணவிகளின் விடுதிக்கு சென்றார்.

அப்போது, அங்கிருந்த மாணவிகள் இரவு நேரத்தில் அணிந்திருக்கும் சாதாரண உடையில் இருந்ததால், அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், மாணவகளிடம், `தேசிய அளவிலான போட்டிகளில் அதிகளவில் பங்கேற்று பதக்கங்களை பெற வேண்டும்’ என கூறியுள்ளார்.

மேலும், குடியரசு தின விழாவில், தாங்கள் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் பற்றி கூறும்படி தெரிவித்துள்ளார். ஆனால் மாணவிகள் அனைவரும் நைட்டி மற்றும் சாதாரண உடையில் இருந்ததால், அமைச்சர் வரும்போது, அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டினர்.

கடந்த ஆட்சியின் போது, அமைச்சராக இருந்த சுந்தர்ராஜன் நள்ளிரவில் மாணவிகள் விடுதியில் ஆய்வு நடத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.