வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 23 மே 2015 (15:23 IST)

ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் செண்டம் எடுத்து அபாரம்

ஆசிரியையுடனான காதலால் ஓடிப்போன பத்தாம் வகுப்பு மாணவன் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 
மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை கோதைலட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவன் கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து மாயமாகினர்.
 
தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
 
இதனால் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில், அந்த மாணவன் 500க்கு 452 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.