வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (19:13 IST)

ஜி.எஸ்.டி எதிர்ப்பு - கரூரில் பிசுபிசுத்து போன வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் தொடர்வதாகவும், இதனால் 6 நாட்கள் வேலைநிறுத்தம் நேற்று முதல் வரும் 11 ம் தேதி வரை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.


 


மேலும் ரூ.45 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கரூர் வீவிங் நிட்டிங் அசோசியேஷன் குற்றம் சாட்டியதோடு, தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருவதாகவும் கூறினர். 
 
ஆனால் நேற்று ஒரு சில கடைகள் மட்டுமே மூடியிருந்ததாகவும், இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஜி.எஸ்.டியை பற்றி தெரிந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணமும் மத்திய அரசு நியாயமான தொழிலதிபர்களுக்கு கொண்டு வந்த வரப்பிரசாதம் தான் இந்த ஜி.எஸ்.டி வரி என்றும் இது மூலமாக தான் நமது பொருளாதாரத்தை நிருபீக்க முடியும் என்றும் கூறியுள்ள தொழிலதிபர்கள், அதற்கு வரவேற்பு அளிப்பதாகவும் தாங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறினர்.
 
மேலும், கருப்பு முதலாளிகள் தங்கள் திருட்டுத்தனமாக தொழில் செய்பவர்கள் மட்டுமே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த தொழில் வேலைநிறுத்தம் என்பது வெறும் கண் துடைப்பிற்கே என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மேலும் டெக்ஸ்டைல் அதிபரும், கரூர் எக்ஸ்போர்ட் அசோஷியன் நிர்வாகியுமான செல்வன் என்பவர் கூறுகையில், இந்த ஜி.எஸ்.டி மூலமாக மத்திய மற்றும் மாநில அரசிற்கு நல்ல வருமானம் உள்ளதோடு, நிறைய தொழிலதிபர்கள் டின் நம்பர் இல்லாமல் இன்கம் டெக்ஸ் கட்டாதவர்கள் கூட தற்போது ஜி.எஸ்.டிக்கு வரவேற்பு தெரிவித்து அவர்களே மாறி வருகின்றனர். அதை விட்டு நான் வரி கட்டமாட்டேன், அன் அக்கவுண்ட் மூலமாக தொழில் புரிபவர்கள் மட்டுமே ஜி.எஸ்.டியை எதிர்க்கின்றார்கள். மற்றபடி இந்த ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 நாள் கடையடைப்பு என்பது மத்திய அரசினை மிரட்டுவதற்கும், நான் வரி கட்டமாட்டேன் என்று கூறுபவர்கள் மட்டுமே இப்படி போராடுகின்றனர். 
 
மேலும் 99 கடைகள் திறந்து தங்களது வரவேற்பினை காட்டும் நிலையில் மீதமுள்ள ஒரு சதவிகிதம் நபர்கள் மட்டுமே அவர்களையும் குழப்பிய நிலையில், 5 சதவிகிதம் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் செல்வன் கூறியுள்ளார். அதேபோல், தொழில் நகரமான கரூர் நகருக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் தொழில்களும் எந்த வித பாதிப்பிற்கும் ஆளாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இவர்கள் கூறும் இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களை மட்டுமே பாதிப்படைய செய்யும். அதுவும் 10 சதவிகிதம் அவர்களுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தான் என்றும் கூறினார்.
 
- சி. ஆனந்தகுமார்