வயிற்றில் கையுறையை வைத்து தைத்த மருத்துவர்கள்! பிரசவத்தின் போது நேர்ந்த கொடுமை!

Last Updated: திங்கள், 3 டிசம்பர் 2018 (15:37 IST)
பிரசவ ஆபரேஷன் செய்தபோது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்த மருத்துவர்கள். பாதிக்கப்பட்ட பெண் மீண்டும்  உரிய சிகிச்சை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். 
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது, கையுறையை வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட பெண்ணிற்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரின் மனைவி கார்த்திகா பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் கவனக்குறைவாக கையுறையை அவரின் வயிற்றில் வைத்து தைத்ததாக கூறப்படுகிறது. 
உடல் நலக் குறைவு ஏற்பட்டு சோதனை செய்ததில், வயிற்றில் கையுறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது.  இருப்பினும், கார்த்திகாவிற்கு தொடர்ந்து உடல் நலக்குறைகள் ஏற்பட்டுவருவதால் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :