வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (15:41 IST)

டி.ஆர்.பி.க்காக பஞ்சாயத்து செய்வதை நிறுத்துங்கள் - நடிகை ரஞ்சனி அதிரடி

டி.ஆர்.பி. ரேட்டுக்காக நடிகைகள் சின்னத்திரைகளில் பஞ்சாயத்து செய்வதை நிறுத்துங்கள் என்று நடிகை ரஞ்சனி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியிலும் நிஜங்கள் என்ற பெயரில் நடிகை குஷ்பூ குடும்ப பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.   

மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தெலுங்கில் நடிகை ரோஜா தற்போது கீதா, மலையாளத்தில் நடிகை ஊர்வசி போன்ற நடிகைகள் நடத்தி வருகின்றனர்.

நடிகை ஸ்ரீபிரியா இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க நீதிமன்றம், ஆலோசனை மையங்கள் இருக்கிறது. நடிகைகள் எதற்கு அதை செய்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரஞ்சனி, ”பல மொழிகளிலும் உள்ள அனைத்து சேனல்களில், ’கவுன்சலிங்’ என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் வெட்கக்கரமானது.

உண்மையிலே, இந்த கொடுமைப்படுத்துதல், துஷ்பிரயோகம், தாக்குதல், பாலியல் பாகுபாடு, சுரண்டல் மற்றும் பொது தொல்லை ஆகியவற்றிற்கு இது தீர்வு கிடையாது. பொதுமக்கள் இதுபோன்று நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற குடும்ப பிரச்சனைகளை டிவி நிகழ்ச்சிகள் உங்கள் குடும்பத்தினர் இழிவுபடுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.