Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி, கமல், அஜித்.... குழப்பத்தில் தமிழக பாஜக!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (11:05 IST)
தமிழகத்தில் அரசியல் நிலவரம் பெரும் பரப்பரப்பாக உள்ள நிலையில் தமிழகத்தின் இந்த நிலையில் பயன்படுத்திக்கொள்ள களமிறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 

 
7 எம்எல்ஏக்களையும் மக்கள் ஆதரவையையும் வைத்துக் கொண்டு முதல்வராகத் தொடரும் ஓபிஎஸ். இன்னொரு பக்கம் 127 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைகாத்து வைத்திருந்தும், முதல்வராக முடியாமல் தவிக்கும் சசிகலா இவர்களின் நிலையை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
தமிழகத்தில் பாஜக கட்சியின் முக்கிய மைனஸ், கவர்ச்சிகரமான தலைவர்கள் யாருமில்லை. எனவே இந்த வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது பாஜக. எப்படியாவது ரஜினிகாந்தை இழுத்து பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக்கிவிட வேண்டும் என்பது திட்டம். ஆனால் ரஜினி பிடிகொடுக்கவில்லை.
 
இதனால், பாஜக-வின் கவனம் கமல் ஹாசன், சரத்குமார், அஜீத் ஆகியோரின் பக்கம் திரும்பி உள்ளதாக தகவல். சரத்குமார்  பாஜகவுக்கு இணக்கமாகப் பேசி வருபவர். கமல் ஹாசன் அவ்வப்போது பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்களுடன் தொடர்பில் உள்ளவர்.
 
எனவே என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் பாஜக உள்ளதாக பாஜக ஆதரவு தப்பு வட்டாரங்கள் பேசிவருகிறனர்.


இதில் மேலும் படிக்கவும் :