Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாதனை படைத்த இந்திய அணிக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து

team
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (15:08 IST)
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில்  இறுதி போட்டியில் ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியா நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சாதனை படைத்துள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் யு-19 உலக கோப்பையை எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை என்றிருந்த நிலையில் முதல்முறையாக இந்திய அணி 4-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்திருப்பது பெருமையான விஷயம் என்றார்.
 
இத்தகைய மாபெரும் சாதனையை நிகழ்த்தி நாட்டிற்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள கேப்டன் பிருத்விஷா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :