வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (12:34 IST)

ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதி இல்லை: எச்.ராஜா காட்டம்!

ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதி இல்லை: எச்.ராஜா காட்டம்!

தற்போது நடந்து வரும் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை பாஜக தான் மறைமுகமாக இயக்கி வருவதாகவும், பாஜக கொல்லைப்புறமாக தமிழகத்தில் நுழைய பார்க்கிறது எனவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


 
 
இதே கருத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் கூறிவருகிறார். இந்நிலையில் பாஜக மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தற்போது பதிலளித்துள்ளார்.
 
தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாகச் சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்கத்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை. மு.க.ஸ்டாலினும் இதைத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் எதிர்காலத்தில் எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிடனும் என கனவு காண்கிறார்.
 
அவரது முதலமைச்சர் கனவு நிறைவேறாது. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதி இல்லை. கருணாநிதியின் சாமர்த்தியம் ஸ்டாலினுக்குத் துளியும் கிடையாது. மேலும் சாலையோரங்களில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் எச்.ராஜா காட்டமாக கூறினார்.